
ஏ வி எல் எஸ் டிரஸ்ட் அமைப்பின் கீழ் செயல்படும் கோவை வி ஜி மருத்துவமனை, வி ஜி நர்சிங் பள்ளி மற்றும் வி ஜி பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து, தங்களது நிறுவனர் டாக்டர் வேணுகோபால கிருஷ்ணன் அவர்களை நினைவுகூரும் வகையில், நிறுவனர் தினம் மற்றும் கல்லூரி தின விழா கோவை IMA மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவின் முதன்மை விருந்தினராக மகளிர் மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற வுமன்ஸ் செண்டர் மருத்துவமனை நிறுவனத்தின் கிளினிக்கல் டைரக்டர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சி துவக்கமாக பிரார்த்தனை பாடலுடன் ஆரம்பித்து, டாக்டர் ரம்யா ஜெயராம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நிறுவனர் டாக்டர் வேணுகோபால கிருஷ்ணன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, முக்கிய விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கினர்.
பின்னர், கல்லூரி முதல்வர் நவினிஸ்ரீ ஆண்டு அறிக்கையை வழங்கினார். அதன் பின் வி ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. வெங்கடேஷ் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆஷா வெங்கடேஷ் ஆகியோர் உரையாற்றினர். சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
முதன்மை விருந்தினர் தனது சிறப்பு உரையை வழங்கி, கல்வி மற்றும் துணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் வுமன்ஸ் செண்டர் மருத்துவமனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. எஸ். கோவிந்தராஜன், டாக்டர் விஷ்ணுகுமார் வெங்கடேஷ் மற்றும் ஜெயராம் கோவிந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா, நிறுவனத்தின் சிறப்புமிக்க சாதனைகள், ஒற்றுமை மற்றும் அதன் வளர்ச்சியை கொண்டாடும் நோக்கில், நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் நந்தினி வெங்கடேஷ் நன்றி உரையாற்றினார். தொடர்ந்து வி ஜி நிறுவன மாணவர்கள் வழங்கிய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
