
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஜி என் மில்ஸ் சுற்றுப்பகுதிகளான சுப்பிரமணியம்பாளையம், கவுண்டர் மில்ஸ், உருமாண்டம்பாளையம், கணேஷ் நகர், ஐ டி ஐ, காசி நஞ்சேகவுண்டன் புதூர், ஆதவா சிட்டி, உருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னதாக காசி நஞ்சேகவுண்டன்புதூர் மாரியம்மன் கோவில், சுப்பிரமணியம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், கூட்டணி கட்சியினர் ஆள் உயர மாலை அணிவித்தும் உட்சாக வரவேற்பு வழங்கினர்.
பிரச்சாரத்தில் பேசிய பி ஆர் ஜி அருண்குமார் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க உறுதுணையாக இருப்பேன், அதேபோல் ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போறாருன்னு சொல்லிட்டு யாருக்கும் விடியல் தரலை, திமுகவின் மந்திரிகளுக்கு மட்டும்தான் விடியலே என்றார்.
அனைவருக்கும் உரிமைத் தொகை என்றார் தந்தாரா? கேஸ்க்கு மானியம் தரேன்னு சொன்னார் தந்தாரா? மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்துன்னு சொன்னார் பன்னினாரா? அதேபோல விடியல் பயணம்னு சொல்லி பஸ் வருது அந்த பஸ் நேரத்திற்கு வருதா? வீட்டு வரி உயர்வு பன்னமாட்டேன்னு சொன்னார் பன்னினார். மின் கட்டணம் உயர்த்த மாட்டேன்னு சொன்னார் பன்னினார். எதை எதை பன்ன மாட்டேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தாரோ அத்தனையும் பன்னினார் என்று சொல்லி தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
