
விளம்பரத் துறையில் இரண்டு தசாப்தங்களாக சாதனை படைத்து வரும் அட்வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழா கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.
அட்வேவ்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெரால்டு ஜெயப்ரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை
சுகுணா ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக பங்குதாரர் சிவகுமார்,ஆனமலைஸ் டொயோட்டா நிறுவன துணைத் தலைவர் சிவராம்,
கோவை ஹூண்டாய் துணைத் தலைவர் அபுதாஹிர்,
ரமணி குழுமம் பொது மேலாளர் ஜெயராம்,
கிக்கானி குளோபல் அகாடமி நிர்வாக பொது மேலாளர் ஜெயராம்,கோவை தினத்தந்தி மேலாளர் மைக்கேல் சோமைதாஸ்
தினமலர் செயல்பாடுகள் மண்டல மேலாளர் செந்தில்,
தி இந்து விளம்பர பொது மேலாளர் சிவகுமார்,
தினகரன் வணிக மேலாளர் – சந்திரமோகன்
கோவை ஹலோ எஃப்.எம்., நிலைய தலைவர் கோபிநாத்
ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும் இந்த விழாவில் சுகுணா ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக பங்குதாரர் சிவகுமார்
ஆட்டோலைட் ஏஜன்சி நிர்வாக இயக்குநர் அஜய் குமார் குப்தா,சந்திரா ஆட்டோ பார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சேகர் ஆகியோர் நிறுவனத்தின் புதிய லோகோவை வெளியிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,மான்செஸ்டர் ஹோண்டா வணிகத் தலைவர் பிரேம்,இ.வி.எம். நிசான் தமிழ்நாடு வணிகத் தலைவர் சபரிநாதன்
ஆனமலைஸ் ஐச்சர் உதவி பொது மேலாளர் தரணி குமார்,ப்யூச்சர் கன்சாலிடேட்டர்ஸ் இயக்குநர் அனீஷ் குல்ஹாம்,ஸ்டோரி ஹோம்ஸ் செயல்பாடுகள் துணை பொது மேலாளர் சுஹைல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேலும் ஏட் வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் மேலாளர் ரமணி ஜகநாதன்,கணக்கு மேலாளர் தனலட்சுமி,உதவி மேலாளர் வித்யாதரன்,மற்றும் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள் என அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். 20 ஆண்டுகள் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் உறவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில், நிறுவனத்தின் பயணம், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இந்த விழாவில் வணிகத் துறையினர், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
