சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த அன்பு அறம் செய் அறக்கட்டளை.
கம்பம்,5.6.2026, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வனவர் ஜெய்கணேஷ், வனவர் சுப்பிரமணி,சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலக கிளர்க் பிச்சைமணி, விவசாயி சங்கிலி, மோகன், லதா, ஜெயா, பாண்டி ஆசிரியர், முகமது ஷெரிப்,வரியவர்களின் வழிகாட்டி கோவிலா முருகேசன், நவநீதி சஞ்ஜீவி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
நிகழ்வில் அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனர்,சுதந்திர தின விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து சான்றிதழ் மற்றும் விருது பெற்ற சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா இன்றைய தினமான ஜூன் 5 பற்றி எடுத்துக் கூறினார்.அதைத் தொடர்ந்து வருகை தந்த அனைவருக்கும் மஞ்சப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் துணிப்பையான மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இன்றைய தினத்தில் சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றுக்கரையில் குறுங்காடு அமைப்பதற்கு தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்பது பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு அறக்கட்டளை நிறுவனர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா செய்திருந்தார்.