கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனத்தில் பயிலும், மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு யாழி 5.0 அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விழா கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஐஎன்எஸ் அக்ரானி செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிறுவனர் கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இங்கிலாந்த் நாட்டில், வரும் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி,வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாகவும்,
உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க தயார் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் எனவும் கூறினர். ‘டீம் சீ சக்தி குழுவினர், தங்களது ஐந்தாம் தலைமுறை மின்சார பந்தயப் படகினை தயாரித்து அதற்க்கு ‘யாலி 5.0 என பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.