
கோவை ஜி வி ரெசிடென்சி அருகில் வி ஸ்மைல் டென்டல் ஸ்டுடியோ எனும் பல் மருத்துமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட பொருப்பாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து இப்பல் மருத்துவமனையில் நிறுவபட்டுள்ள அதிநவீன கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்
வினோதா, கூறியதாவது..
தற்போது வளர்ந்து வருகின்ற நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்க பட்டுள்ள அதிநவீன கருவிகளுடன் இயங்கக்கூடிய, இப்பல் மருத்துவமனை தற்பொழுதைய கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டி.ஓ இம்ப்ளானட் நிறுவனத்தின் ரே பேஸ் ஸ்கேன் எனும் இயந்திரம் முதல்முறையாக இந்தியாவில் தனியார் பல் மருத்துவமனை என்றால் அது இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்துடன், இணைக்க பட்டு நமது முகங்களை ஸ்கேன் செய்வதுடன் நம் பற்களுக்கு எந்தமாதிரியான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்து விடும், பின்னர் பற்களுக்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் அளிக்கலாம் என்றார். கூடுதலாக இங்கு ஸ்பேஸ் ஸ்கேனர் கருவிகள், சி.பி.சி.டி கருவிகள் என அதிநவீன கருவிகளுடன் இப்பல்மருத்துவமனை செயல்படுகின்றது என்றார். இந்த மருத்துவமனை துவக்கவிழா நிகழ்ச்சியில் மருத்துவர் ஆஷிக், டி. ஓ இம்ப்ளானட் நிறுவனத்தின் விற்பனை இயக்குனர் சங்கர், விற்பனை மேளாளர் கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
