
கோவை சூலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வரும் எல்ஜி மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் லதா கோபிநாத் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் முன்னிலையில் குழுவாக இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கொண்டாட பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய
எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் லதா கோபிநாத் கூறியதாவது..
, உலக மருத்துவர்கள் தினம், இன்றைந நாளில் அனைத்து துறை மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆண்டு தோறும் , ஒவ்வொரு கருப்பொருளை முன்வைத்து மருத்துவர்கள் தினம் கொண்டாட பட்டு வருகின்றது இந்த ஆண்டு, மருத்துவர்களின் உடல் நிலையை பேணி காக்க வேண்டும் என்ற கரு பொருளின் கீழ் இந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளில் மருத்துவர்கள் தங்களது உடல்நிலையை பேணி காப்பது, மிகவும் அவசியம், குறிப்பாக மருத்துவர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே மருத்துவர்களின் உடல்நிலையை காக்க முடியும், என தெரிவித்தார். குறிப்பாக டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து வருகின்றோம் இன்றைய நாளில் அலைபேசியில் செயல் பாடுகள் அளப்பரியது, அதன் தேவைகளை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதில் மூல்கி விட கூடாது என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய
குழந்தைகள் நல மருத்துவர்
டாக்டர் மனோ பாரதி கூறுகையில், இன்றைய உலகில் உள்ள, அனைத்து குழந்தைகளையும் குழந்தைகளின் பெற்றோர்களே கெடுத்து விடுகின்றார். உணவு ஊட்டுவதற்க்கு கூட செல்போன்களை குடுத்து விடுகின்றனர். இது மிக பெரிய தவறான செயல் இதனால் குழந்தையின் கவனம் முழுவதும் செல்போனில் தான் இருக்குமே தவிர, உணவின் மீது இருக்காது இது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, குழந்தையின் மனநிலையையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
