கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களை நிறுத்தி, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் படி, போக்குவரத்து துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் இ1 சிங்காநல்லூர் காவல்நிலைய பகுதிகளான, கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்குக்கு வந்திருந்த ரசிகர்கள் மத்தியில், சிங்காநல்லூர் காவல்நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரேம் குமார் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை இயக்கும் பொழுது சாலை விதிகளை எவ்வாறு கடை பிடிக்க வேண்டும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள், தடை செய்ய பட்ட ஒன்வே சாலையில் செல்லும் பொழுது என்னென்ன தீமைகள் ஏற்படும், மது போதையில் வாகனங்களை இயக்கினால் ஏன்னேன்ன இடையூறுகள் ஏற்படும், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோர்களுக்கு என்ன தண்டனை உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்து கூறினார். இதில் திறலாக கலந்து கொண்ட ரசிகர்கள், காவல்துறையினரின் இந்த விழிப்புணர்வை கேட்டு சாலை விதிகளை முறையாக கடைபடிப்போம் என்று உறுதியளித்தனர் இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகாலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.