
கோவையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஏட் வேவ்ஸ் அட்வர்டைசிங் மற்றும் புரோசோன் மால் இணைந்து நடத்திய ‘கோவை தி கிராண்ட் மோட்டோ ஃபெஸ்ட்’ நிகழ்ச்சி, ப்ரோசோன் மால் வளாகத்தில் நடைபெற்றது.
துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், பல்வேறு வகையான சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்கள் என 25 க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்களின் கார்கள்,பைக்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. வாகனங்களின் நவீன வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கார் மற்றும் பைக் ஆர்வலர்கள், இளைஞர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வாகனங்களை பார்வையிட்டு ரசித்தனர்.
பலர் தங்களது வாகனங்களையும் காட்சிக்கு கொண்டு வந்து மோட்டார் வாகனங்கள் மீதான தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
வாகன ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் இந்த கண்காட்சியில்வார இறுதியில் கண்காட்சியை காண ,குடும்பத்துடன் வருபவர்களுக்கு கண்டு களிக்க ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடப், குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகளும்,நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன.. மேலும் ஆடி சிறப்பு விற்பனையாக ஏராளமான சலுகைகள் வழங்க உள்ளதாகவும்,, மோட்டார் வாகன கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக ஏட் வேவ்ஸ் அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெரால்டு மற்றும் புரோசோன் மால் மேலாளர் நாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
