
நாடு முழுவதும் உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் உள்ள, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையையும், தலைமைத்துவப் பண்புகளையும் வளர்ப்பதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு அமைப்பான தேசிய சேவை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை,
கோவை சிங்காநல்லூர் விஜிஎம் மருத்துவமனை முன்னெடுத்தது.
இந்த நிகழ்ச்சியில், கோவை விஜிஎம் மருத்துவமனையின் மருத்துவரும், கல்லீரல் நிபுணருமான டாக்டர் மித்ரா பிரசாத் மாணவ மாணவியர்கள் மத்தியில் கல்லீரல் குறித்து விளக்க வுரையாற்றினார்.
அப்பொழுது மாணவ மாணவியர்கள் மத்தியில் அவர் கூறியதாவது..
கல்லீரல் என்பது மனித உடலின் மிகப்பெரிய உட்புற உறுப்பாகும். நாம் உண்ணூம் கொழுப்பைச் செரிக்கவும், உறிஞ்சவும் உதவும் பித்த நீரைச் சுரக்கிறது.
மருந்துகள், இரசாயனங்கள் மற்றும் உடலுக்குத் தேவையில்லாத கழிவுப் பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரித்து சுத்திகரிக்கும் பணிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பணிகளை செய்கின்றது. கல்லீரல் செயல் இழப்புக்கு காரணம்
தொடர்ந்து அதிக மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களால், கல்லீரல் வீக்கம், கொழுப்புப் படிவது, போன்ற பல்வேறு நோய்க்கு வழிவகுக்கும், உடல் பருமன், நீரிழிவு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேரும், இவைகள் கல்லீரலை மெதுவாகப் பாதித்து செயலிழக்கச் செய்யும்.
மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல் அல்லது முழுமையாகக் கட்டுப்படுத்துதல்.
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தல்.
மருத்துவர் வழிகாட்டுதல் இன்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் கல்லீரல் பாதிப்பின்றி நீண்ட நாள் உயிர் வாழலாம் என்று தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் ஜூலியன் ஞான தாஸ், என்.எஸ்.எஸ் நிகழ்ச்சி அதிகாரி பிரபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் விஜிஎம் மருத்துவமனை சார்பாக, சுமார் 200 நபர்களுக்கு, கல்லீரல் தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
