
பாரத் சேவா கேந்த்ரா அமைப்பின் சார்பாக, 2026ம் ஆண்டுக்கான உலக சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி வருவதுடன், மாற்று திறனாளிகளுக்கு இலவச நோட்டரி கையேழுத்துக்களை வழங்கி வரும் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கபட்டது. இதனை கலைமகள் டியூசன் சென்டர் உரிமையாளர் மகேஸ்வரன், ஆசிரியை கலையரசி, பந்தல்காரர் வெங்கடாச்சலம் ஆகியோர் இன்று வழங்கினர். தொடர்ந்து இது குறித்து வழக்கறிஞர் புஸ்பாணந்தம் கூறியதாவது..
கோவையில் வழக்கறிஞராக உள்ள தான், பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றேன், எந்த வித பிரிதிபலன் பார்க்காமல் இதனை செய்து வருகின்றேன். குறிப்பாக முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரசால் கிடைக்க படும் அனைத்து உதவிகளையும் பெற்று தர அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். மேலுல் பசுமையை காக்க மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், கோடை காலங்களில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்குவது, மாற்று திறனாளிகளுக்கு நோட்டரி கையேழுத்துகளை இலவசமாக போடுவது என பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றேன் இதனை பாராட்டும் விதமாக இந்த விருது தனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதுகிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, ஜெபா,
முன்னாள் அதிமுக கவுன்சிலர் விஜயகுமார், மதிமுக 82 வது வார்ட் செயளாலர் மார்ஷல், வைத்தியர் பாலகிருஷ்ணன், அதிமுக வீரபாண்டி செயளாலர் ராமசாமி, வழக்கறிஞர் படித்துள்ள மலுமிச்சம்பட்டி சதாசிவம், சொமையனூர் கார்த்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
