
கோவையில் யூஸ்டு கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், 500″க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் 11-வது மாபெரும் யூஸ்டு கார்ஸ் மாநாடு துவங்கியுள்ளது..
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பில் வருகின்ற நவராத்திரி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யூஸ்டு கார்கள் இரண்டாவது மாநாடு, விற்பனை திருவிழா
காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை, கோவை பட்டணம் பகுதியில் உள்ள எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள “கார்ஸ் 327” வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற காரை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள், மற்றும் சிறப்பு சர்விஸ் சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் நேரில் சென்று கார்களை பார்வையிட்டு, விலை மற்றும் வசதிகளை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் என கார்ஸ் 327 நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
