ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றதுஇதில், தமிழகம் முழுவதிலும் இருந்து, சுமார் 350-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு, கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டாடியதுடன், வணிக உறவுகளை வலுப்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கினர்.
வெறும் மூன்று தயாரிப்புகளுடன் தொடங்கிய இந்த நிறுவனத்தின் பயணம், இன்று பல்வேறு தயாரிப்புப் பிரிவுகள் மற்றும் ஏற்றுமதி சந்தைகளை உள்ளடக்கிய விரிவான வணிகமாக வளர்ந்துள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் தனது விநியோக வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிகழ்வில் சுகுணா குழும நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் தொடர் ஒத்துழைப்பைப் பாராட்டும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது. விநியோகஸ்தர்களுக்குத் தேவையான தயாரிப்புகளைச் சீராகக் கிடைக்கச் செய்தல், தயாரிப்புகளின் வகைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான வணிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனத்தின் வெற்றியும் விநியோகஸ்தர்களின் வெற்றியும் ஒன்றோடொன்று இணைந்தவை என்றும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நீண்டகால வணிக உறவுகளே நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, புதிய தயாரிப்புப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவான சிவா டிரேடிங் ஹவுஸ் சார்பில் டிஷ்யூ பேப்பர் மற்றும் மெழுகுவர்த்தித் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கொங்கு டூரிஸ்டர் மற்றும் கேரி ஆன் ஆகிய பிராண்டுகளின் கீழ் டிராலிகள் மற்றும் பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் நிறுவனத்தின் தயாரிப்புப் பட்டியல் விரிவடைந்ததுடன், விநியோகஸ்தர்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில்
ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் மற்றும் சிவா டிரேடிங் ஹவுஸ் நிறுவனங்களின் தலைவர் கே. நடராஜன், அவரது மனைவி சங்கரி நடராஜன், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் சிவராம், அவரது மனைவி ஹர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.