
கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களின் ஆங்கில மொழித்திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகளுடன் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முரளிதரனும், பிஎஸ்ஜி பள்ளிகளின் செயலாளர் நந்தகோபாலன், பிஎஸ்ஜி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி இம்மன்றத்தை துவக்கி வைத்தனர் மேலும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக இந்த விழாவில் பங்கேற்றனர்.

தொடர்ந்து இறைவணக்கப் பாடலுடன், குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது..
அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு, சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்மாணவர்களிடையே ஆங்கில மொழியின் மீது ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தும் முக்கிய முயற்சியாக ஆங்கில மன்றம் துவங்கபட்டது.
விழாவில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர், முரளிதரன் கூறியதாவது.. மாணவர்களின் கல்வி, வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் மொழித்திறன், சிறந்த தகவல் தொடர்புத் திறன் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இவ்விழாவில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை மற்றும் மொழிசார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதில் கவிதை வெளிப்பாடு, கருப்பொருள் சார்ந்த ஆடை அலங்காரம், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
