
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்காக நகராட்சி மன்றம் நிர்வாக இயக்குனர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குனர் நகராட்சிகளாக ஆகும் பொழுது அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர் ஆனால் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்கும் பொழுது கிராமங்களில் இயற்கையின் சூழ்நிலையில் இருந்து மாறுபடுகிறது விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது.
வீட்டு வரி உயர்த்தப்படுகிறது காலி மனைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது குடிநீர் கட்டும் உயர்த்தப்படுகிறது அது மட்டும் இல்லாமல் நகர்ப்புறங்கள் உடைய கழிவுநீர்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் உள்ள குடிநீர் ஏரி குளம் குட்டைகளில் ஆறுகளில் கலந்து குடிநீர் மாசு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் பல்வேறு விதமான இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் ஏற்படுகிறது.
தற்போது நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நாமக்கல் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்த பொழுது நாமக்கல் நகராட்சியை ஒட்டி அருகாமையில் அமைந்திருந்த 12 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது அப்பொழுது மீண்டும் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு ராசிபுரம் இரண்டாம் நிலை நகராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு மொத்தம் 19 ஊராட்சிகளை இணைப்பதற்காக பணி நடைபெற்று வருகிறது ஆக மொத்தம் இதுவரை 31 கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் பணியை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் செய்து வருகிறது இதனால் 31 கிராமங்களில் பணியாற்றிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் சுமார் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள் குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களுடைய பொருளாதாரம் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது எனவே இதை கருத்தில் கொண்டு நகரமயமாக்கல் என்ற கொள்கையின் பேரில் கிராமங்களையும் கிராம மக்களையும் நசுக்குவதற்காக இப்பணி நடைபெற்று வருகிறது எனவே உடனடியாக நகரங்களுடன் கிராமங்களை இணைக்கும் முயற்சி கைவிடுவதற்கு தமிழக அரசும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கிராம மக்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் இது போன்ற செயல்களில் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுவது கண்டனத்திற்குரியதாகும் எனவே இத்திட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்தனர்
