இ
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருகிறது.திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் மீது வரி மற்றும் விலை உயர்வை ஏற்றி வருகிறது. மாநாகரட்சி,நகராட்சியில் அதிக அளவு வரி உயர்வு ஏறி உள்ள நிலையில் தற்போது இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க முயற்சி செய்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் மாவட்ட அதிமுக சார்பிலும் இலக்கியம்பட்டி ஊராட்சி மக்கள் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கண்டன உரை ஆற்றினார். கண்டன உரையில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் சொத்து வரி உயர்வு தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைவார்கள் என உரையாறாறினர். அதனையடுத்து ஸ்டாலின் அரசின் இந்த போக்கினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார். மக்களும் ஸ்டாலின் அரசை்கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு செயலாளர் டி.ஆர்.அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
