கும்பகோணம் அருகேஅய்யம்பேட்டையில் 53வது ஆண்டு துவக்க விழா ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்

அ.தி.மு.க.53 -வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அய்யம்பேட்டை நகர செயலாளர் முகம்மது இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் கலைநிதி, அய்யா பிள்ளை, ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த ஓ.பி.எஸ். அணியினர் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் சமுத்திரம், தாமஸ், உதயகுமார், நகர நிர்வாகிகள் மூசா, அப்பாஸ், முத்துக்குமார், ரகுநாத், அம்ஜத், ஆரிப், சபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.