தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு (5 பெண் 3 ஆண் குழந்தைகள்) நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் MLA அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை முதலமைச்சர் அவர்கள் கூறியதுபோல் தமிழில் பெயர் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து சங்கரன்கோவில் முக்கு பகுதியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை MLA அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜ மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி சேத்தூர்சேர்மன் பாலசுப்பிரமணியன் துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசாறைஆனந்த் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி இளைஞரணி நிர்வாகிகள் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

