தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதற்கு முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகப் பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலர்களை நேரில் சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..
