ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவு
ராயக்கோட்டை,டிச.2-
ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில், தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்த சுமார் 200 பேர் தங்களை திமுக வில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முருகன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் அரியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், நகர செயலாளர் நாகராஜன், அவைத்தலைவர் ஜெயராமன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
ராயக்கோட்டை பகுதி மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைவு
