தமிழக அரசு சார்பில்
தஞ்சை மாநகர மையப் பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும் .
வி.சி.க.
தஞ்சை மையம் – மாநகர மாவட்டச் செயலாளர்கள்
கூட்டாக பேட்டி .

தஞ்சாவூர்,டிச.7- சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 68-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மையம் மாவட்டம் மற்றும் மாநகர மாவட்டம் சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மையம் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் சிவா தமிழ்நீதி, மாநகர முன்னாள் செயலாளர் தமிழ் முதல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், தஞ்சை ஒன்றிய செயலாளர் மறியல் வினோத், தஞ்சை ஒன்றிய பொறுப்பாளர் விளார் பாஸ்கர், கிள்ளிவளவன், மெடிக்கல் கோபி, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில ஆலோசகர் சேகர், மாநகர தலைவர் முனைவர்
ராஜீவ்காந்தி, டாக்டர் இன்பென்ட்ராஜ், கரந்தை பகுதி செயலாளர் பெனிட், வல்லம் நாசர், குலோத்துங்கன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகம் பசுபதி, வழக்கறிஞர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன் கூறியது:இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்கு முழு உருவச் சிலை தஞ்சை மாநகரத்தின் மையப் பகுதியில் தமிழக அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு சார்பில் சிலை வைக்கவில்லை என்றால், வரும் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சையில் மாநகர மையப் பகுதியில் அம்பேத்கருக்கு முழு உருவச் வெங்கல சிலை வைக்கப்படும் என்றார்.
தஞ்சை மையம் மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர் கூறியது;அரசியல் சாசனத்தில் எழுதப்பட்ட சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதி போன்ற தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழக அரசு அம்பேத்கர் அடிப்படை கோட்பாடுகளை போற்றும் வகையில் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை வைத்து இருப்பது போல், தமிழகத்திலும் குறிப்பாக சட்டமன்றம் செயல்படும் அருகில் டாக்டர் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை நிறுவ வேண்டும். அதேபோல் தஞ்சையின் மையப் பகுதியிலும் முழு உருவ சிலை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
செய்தி.ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.

