அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் – கழக துணை பொதுச்செயலாளர் முனுசாமி பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அரசம்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காவேரிப்பட்டிணம்  ஒன்றிய கழக அவைத்தலைவர் வடிவேலன்  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியபோது, 32 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சி மக்களுக்கான சிறப்பான ஆட்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர்.க்கும் ஜெயலலித்தாவிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை, அதேபோல் ஜெயலலித்தாவிற்கும் எடப்பாடியாருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. சம்மந்தமே இல்லாத நபர்கள்தான் அதிமுகவில் முக்கிய பொறுப்புக்கு வருகிறார்கள். ஆனால் திமுக என்பது கருணாநிதி குடும்ப கட்சி. கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார். ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும்போதே அவரது மகன் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களையும் அவரிடத்தில் கொடுத்துள்ளார். இதுவே திமுகவை  கருணாநிதி குடும்ப கட்சி என்று அழைக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து 2024ல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஒவ்வொரு தொண்டனும் கடுமையாக இன்றிலிருந்து உழைக்க வேண்டுமென பேசினார்.  ஒன்றிய கழக பொருளாளர் ராமன் நன்றியுரையாற்றினார். அதிமுகவின் பொருப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் 500த்தற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.