ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.

காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று நிலவரப்படி வினாடிக்கு 8500 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக குறைந்துள்ளது இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சீனி அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.