நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சாம்பட்டி அருகே ஆசாரிக்காடு கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியினர் தர்மலிங்கம், லெட்சுமி ஆகிய இருவரும் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் ராசிபுரம் தாலுக்காவிற்குட்பட்ட கட்டனாச்சாம்பட்டியில் சின்னையன் என்பவரின் 4.76 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 1980 ம் ஆண்டு முதல் தனது தந்தை ராமசாமி குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார், தனது தந்தை இறந்து விட்டதால் தொடர்ந்து தான் விவசாயம் செய்து வருகின்றோம். இந்த நிலையில் கடந்த 20 ம் தேதி உயிரிழந்த சின்னய்யன் என்பவரின் வாரிசுகள் என கூறிக்கொண்டு சிலர் அடி ஆட்களுடன் வந்து விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காசோளம் பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதால் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு வயதான தம்பதியினர் மனு அளித்துள்ளனர்.
