கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வந்த, ஏஞ்சல், எலினா நினைவு கூடைப்பந்து போட்டியில், இளம் வீரர்களின் திறமைகள் களமிறங்கி சாதனை படைத்தனர்.

யுனைடெட் கூடைப்பந்து கழகம் சார்பாக, கோவை வ உ சி பூங்கா மைதானத்தில், ஏஞ்சல் எலினா நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. ஜி20 நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டிகளில் பங்கேற்ற, பல்வேறு பள்ளிகளில் இருந்து இளம் வீரர் வீராங்கனைகள், கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறன்களை வெளிபடுத்தினர்.
இதன் நிறைவு விழா நடைபெற்றது இதில், தலைமை விருந்தினராக மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் ஜி.செல்வராஜ் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். மேலும், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறந்த அணிகளையும் வீரர்களையும் வாழ்த்தினர். பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அல்வேர்னியா பள்ளி சாம்பியனாகவும், எஸ்.வி.ஜி.வி. பள்ளி இரண்டாம் இடத்தையும், ஒய்.எம்.சி.ஏ. அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பாரதி பள்ளி முதலிடத்தைப் பெற்றது, டெர்ஸ்டி அணியினர் இரண்டாம் இடத்தையும், பீப்பல் பிராடிஜி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பதினொன்று வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அல்வேர்னியா பள்ளி சாம்பியனாகவும், பாரதி, சி.சி.எம்.ஏ., பீப்பல் பிராடிஜி அணிகள் சிறப்பாக விளையாடின.
தனிநபர் சிறப்புப் பரிசுகள் ஜோஷ்னா, ஹர்ஷித், ஆதவ், ஆன்யா, அஷ்வத், ஆர்ணவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இளம் வீரர்களில் விவாந்தா மற்றும் தருன் ஆகியோர் புதிய திறமைகளாகத் திகழ்ந்தனர்.
அனைத்து பள்ளிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இளம் வீரர்களின் திறமையையும் ஒழுக்கத்தையும் பெருமையுடன் பாராட்டினர்.
இப்போட்டி இளம் தலைமுறைக்கு விளையாட்டு ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் மன உறுதியை ஊக்குவிக்கும் சிறந்த தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.