சினிமா பட பாணியில் சங்கராபுரம் அருகே 4 திருமணத்தை மறைத்து 5வதாக திருமணம் செய்த கணவனை விட்டு 6 வது நபரோடு ஓட்டம்!நகையும் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் சிவகுமார் இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் கடந்த 2020இல் திருமணம் ஆகி உள்ளது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர் இந்த நிலையில் சிவகுமார் மனைவி காளீஸ்வரி தனது குழந்தைகளை ஆந்திராவில் உள்ள தன் கணவனின் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்றவர் ஆந்திராவில் குழந்தைகளை விட்டுவிட்டு காணாமல் போயிருந்தார் இதை அறிந்த சிவக்குமார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்திருந்தார் இந்த புகார் இயற்றிய காவலர்கள் காளீஸ்வரியை அழைத்து விசாரித்த போது நான் சொந்த விருப்பில் தான் சென்று உள்ளேன் நான் காணாமல் போகவில்லை என ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் இதை அறிந்த சிவகுமார் என் மனைவி வந்ததை ஏன் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை புகார் கொடுத்தது நான் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் அவரை திருப்பி அனுப்பி விட்டீர்களே என்று கேட்டதற்கு காவல்துறையினர் சரியான பதில் அளிக்கவில்லை என கூறினார் அதன் பின்பு மதுரையில் உள்ள காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமியிடம் சென்று சிவகுமார் நீங்கள் காளீஸ்வரிக்கு தாயா இல்லை மாற்றம் தாயா என கேட்டுள்ளார் அதற்கு கண் கலங்கிய காளீஸ்வரி தாய் மகாலட்சுமி நடந்த உண்மையை அனைத்தையும் சொல்கிறேன் என்று உனக்கு முன்பாகவே அவளுக்கு நான்கு திருமணங்கள் ஆகிவிட்டது என்றும் அதை மறைத்து தான் உன்னை திருமணம் செய்து இருக்கிறார்கள் என்றும் எனக்கு தெரிய வந்தது. சென்னை சேர்ந்த வெங்கடேசன், கோயம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், மூன்றாவதாக ஜெயராஜ், நான்காவதாக லிங்குசாமி, பிறகு ஐந்தாவதாக சிவகுமாரை திருமணம் செய்ததாக தெரியவந்தது அதற்கான ஆவணங்களையும் என்னிடம் ஒப்படைத்தார். என அவர் கூறினார் பின்பு தற்போது என்னையும் ஏமாற்றிவிட்டு ஆறாவதாக ஆம்பூர் பகுதியில் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இத்தனை ஆதாரங்களையும் எடுத்துச் சென்று சங்கராபுரம் காவல் நிலையம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் விழுப்புரம் மண்டல காவல் துணைத் தலைவர் ஆகியோர்களிடம் தனது குழந்தைகளுடன் மனு கொடுத்துச் சென்று என்னுடைய மனுக்களை எந்த அதிகாரிகளும் பதிலலிக்கவில்லை அது மட்டுமல்லாமல் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்புகிறனர் எனவே வேறு வழியின்றி பூச்சி மருந்துகளை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு இறந்து விடலாம் என்று நினைத்தேன் அப்போது எனக்கு வேண்டியவர்கள் என்னை தடுத்து விட்டார்கள் இதனை தொடர்ந்து இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று சந்திக்க வந்துள்ளேன் இனியாவது என்னைப் போன்று யாரும் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்திற்காகவும் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு ஆறாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு பிறப்பு நடத்தி வரும் இந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் படியும் அவரிடம் இருந்து என்னோட பொருள்களாகிய மூன்றை பவுன் நகை 3 லட்சம் ரூபாய் பணம் ஆகி வச்ச பெற்று தந்து நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.