தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களை மீனாட்சி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் பிரவீன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை தலைவர் மருத்துவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை PPLSSS தலைவர் மருத்துவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை தலைவர் தேர்வு 2025 மருத்துவர் ஸ்ரீதர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை செயலாளருமான மருத்துவர் சரவணவேல் மற்றும் மீனாட்சி மருத்துவமனையின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டு கழகத்தின் தொழில் நுட்ப இயக்குநர் கழுகுமனை சந்திரசேகரன் அவர்கள் மற்றும் குழுவினர் இந்த செயல்முறை பயிற்சி கருத்தரங்கில், மருத்துவர்களுக்கான உயிர் காக்கும் தற்காப்பு கலையைக் கற்றுக் கொடுத்தனர். தமிழகத்தில் இது போன்ற மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.