தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றம் விழிப்புணர்வு நிகழ்வு..

தர்மபுரி மாவட்டம் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றும் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்
என் .கிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் .சிவனேசன் மாவட்ட செயலாளர் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லம்பள்ளி திரு .கந்தசாமி .பகுதி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிந்திடு விழித்திடு செயல்படும் எனும் தாரக மந்திரத்துடன்
குடி மக்களாகிய நுகர்வோர்களுக்கு மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு
பெண்கள் தற்காப்பு/ தரமான பொருட்களை கண்டறிதல்/ நுகர்வோரின் பாதுகாப்பு/
சரியான எடை அளவு கண்டறிதல்/ காலாவதியான பொருட்கள் கண்டறிதல்/ செயற்கை நிறம் கண்டறிதல் /இயற்கை வளம் பேணிக்காத்தல்/ மரம் நடுதல்/பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல்/மஞ்சப்பை பயன்படுத்துதல்/ போதைப்பொருள் தவிர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு மாணவ மாணவியர்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டது இவ்விரு பள்ளிகளிலும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இறுதியில் வகுப்பு ஆசிரியர்கள் நன்றி கூறினார்..