தீபாவளி விற்பனை மற்றும் பட்டாசு வெடித்த சுமார் 250 டன் குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களுக்கு பெரிய ஹோட்டலில் அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்த சமூக ஆர்வலர் ,ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார்.

தஞ்சை மாநகரப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தீபாவளி விற்பனை மும்புறமாக நடைபெற்றது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசுகள் அனைத்தையும் வெடித்து ஊரே குப்பை மேடாக காட்சியளித்தது.

சாதாரணமாக 110 டன் நாளொன்றுக்கு குப்பை சேரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தஞ்சை மாநகரப் பகுதியில் 250 டன் குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 மணி நேரத்தில் சுத்தம் செய்து நகரை தூய்மை செய்தனர். இவர்களை போற்றும் வகையில் இவர்களின் பணியை மதிக்கும் வகையில் சமூக ஆர்வலர்,ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார், அவர்களுக்கு தஞ்சையின் மிகப்பெரிய அசைவ ஹோட்டலுக்கு வேன் வைத்து அழைத்துச் சென்று பிரியாணி விருந்து கொடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

மேலும் அவர்கள் விரும்பும் உணவை உண்ணும் படி செய்து மனம் குளிர் செய்த நகரை தூய்மை செய்தவர்கள் மனதை குளிர வைக்க வேண்டும் என இந்த காரியத்தை செய்ததாக பிரபுராஜ்குமார் தெரிவித்தார்.