
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற தேனி மேலப் பேட்டை இந்து நாடார் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்ற வீராங்கனைகளான மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாநில அளவில் நடைபெற்ற குத்து சண்டையில் வெற்றி பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி மனதார வாழ்த்தினார். உடன் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் தலைவரும் கல்வித்தந்தை டி. ராஜமோகன் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்
