ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சொந்தஊர்கமுதியை அடுத்த நெடுங்குளம் ஆகும் பரமக்குடியில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு ஆம்பூலன்ஸ்சில் நெடுங்குளம் கொண்டுவரப்பட்டது கமுதி காவல்துணை கண்காணிப்பாளர் மாலைஅணிவித்து மரியாதைசெலுத்தினார் காவல்துறையினரின் மரியாதையுடன் 21குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது ஊரே கதறிஅழுதது பார்ப்போரின் கண்ணில் நீர்கசிந்தது
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
