மதுரை,மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை திருவிழா நாளை தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டின் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடக்கிறது. இதில், சித்திரை, ஆவணி, புரட்டாசி, கார்த் திகை மாதங்களில் நடக்கும் திருவிழாக்கள் சிறப்புவாய்ந்தவை. இந்தாண்டிற்கான கார்த்திகை மாத திருவிழா நாளை தொடங்கி, வரும் 19ம் தேதி வரை நடைபெறு கிறது. நாளை (நவ. 10) காலை சுவாமி சன்னதி கொடிமரத் தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடை பெறுகிறது. பின்னர், காலை 11.05 மணியில் இருந்து 11.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
அப்போது சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி – சுந்தரரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். விழா நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வருவர். டிச 13ம் தேதி பெரிய கார்த்திகை தினத்தன்று மாலை, கோயில் வளாகம், பொற்றாமரைகுளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்தி களுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசி வீதியில் உள்ள அம்மன் சன்னதி, தேரடி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்வார்கள். அப்போது இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கீரிடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்கார்த்திகை திருவிழா நாளை துவக்கம்……
