மறைந்த காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு போச்சம்பள்ளி காங்கிரஸ் கட்சி சார்பில் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சார்பு அமைப்பு மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற மலர் அஞ்சலி நிகழ்வில், முன்னால் வட்டார தலைவர் சாந்த சீலன், ஆறுமுகம், கார்த்திக் முனுசாமி, தேவராஜ், மாரியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிறமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.