ராமநாதபுரத்தில் பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டம்-மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது !!!

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை
அக்கீம் தலைமையில் பாரதி நகரில் உள்ள திருவாடானை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்தது.

சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முனியசாமி (திருவாடானை),பாலக்குமரன் (ராமநாதபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராமநாதபுரம் நகர் செயலாளர் ஸ்டாலின்,மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான்,ஆகியோர் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் பழனி பாபாவின் நினைவு அனுசரிப்பு சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது,பெரியார் பேரவை என்ற போர்வையில் சமூக ஒற்றுமைக்கு கேடு விளைவித்து வரும் நாகேஸ்வரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காத கேணிக்கரை காவல்துறையை கண்டித்தும்,பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் மதுபானக்கடையை அகற்ற கோரி கொடுத்த மனுவை நிராகரித்த கேணிக்கரை காவல்துறையை கண்டித்தும்,அடுத்த மாதம் பிப்.23-ம் தேதி நடைபெற உள்ள அனைத்து சமுதாய மாநாட்டிற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆணைக்கிணங்க,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 50 வாகனங்களில் செல்ல வேண்டும் எனவும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் முஹம்மது காதர்ஷா,திருவாடானை சட்டமன்ற தொகுதி தலைவர் கனகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இபுராஹிம் நன்றி கூறினார்.முடிவில் பா.ம.க தலைமை அலுவலகத்திலிருந்து வந்த காலண்டர்களை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்.