ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் திரு உத்திரகோசமங்கை கோவிலில் மாபெரும் அன்னதானம்!!!

ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பெரும் பங்களிப்புடன் இந்த அன்னதான நிகழ்ச்சி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் உதயக்குமார் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள்,மாவட்ட கவுன்சிலர்,ஒன்றிய கவுன்சிலர்கள்,மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள்,ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த அன்னதான நிகழ்வில் பக்தர்கள் 5000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.