ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்.

ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்
ராயக்கோட்டை, நவ.23-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் (பொ) கஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். சுகாதார ஊக்குனர் ஜெயலட்சுமி, அக்ரி தேவராஜ், மின்சார ஊழியர் முருகராஜ், ரேசன்கடை ஊழியர் ராஜமாணிக்கம் , ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் வடக்கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயால் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை வாழ்வாதாரம் குறித்து அறிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதில் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.