
வடகிழக்கு பருவமழை காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பென்னாகரம் பகுதியில் உள்ள மாஸ்டர் தனியார் பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடத்தினர். இந்த பிரச்சாரத்தில் மழைக்காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும் தீ பற்றக்கூடிய இடத்தில் எவ்வாறு தீயினை கையாள்வது என்பதை விளக்கும் விதமாக ஒத்திகை விழிப்புணர்வு போலி ஒத்திகை பயிற்சி ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.
