வந்தவாசி கிழக்கு பாடசாலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு பாடசாலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.‌ பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார்‌ ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின் போது அனைவரும் மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி உணவில் பங்கேற்றனர். உடன் செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா, வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், நகர செயலாளர் தயாளன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை சித்ரா கலெக்டர் அவர்களுக்கு சால்வை அணிவித்து புத்தக பரிசு வழங்கினார்.