திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் மீரா, தனி துணை ஆட்சியர் கணேசன், திருவள்ளூர் வருவாய்க் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
