உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கூத்தப்பாடி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிப்பு.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் பொது மக்களின் குறைகளை கேட்டிருந்தனர் மேலும் அடிப்படை வசதிகள் ஆன சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி, ஆகியவை இல்லாத கிராமங்களுக்கு செய்து தருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்தும் கூத்தப்பாடி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பின்னர் பருவதனஹள்ளி கிராம சபை கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது மேலும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் கூத்தப்பாடி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.