தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக விவசாயிகள் தின கொடியேற்று விழா நிகழ்ச்சி .

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக விவசாயிகள் தின கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் வி.கே. சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கே.பி.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் மாவட்டத் துணைத் தலைவர் கே.எம். ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் .அய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ரெங்கசாமி ,து.அடைக்கலம், ம.ஆறுமுகம், திருவோணம் ஒன்றிய தலைவர் பெரியகருப்பன், திருவோணம் ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணைத் தலைவர் ஜெகநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் வ.பெ.தங்கராசு, ஒன்றிய பொருளாளர் வீ. முருகேசன், பேராவூரணி ஒன்றிய தலைவர் எம். கோபிநாத் , ஒன்றிய துணைத் தலைவர் எஸ். ராமையன், ஒன்றிய செயலாளர் பால சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் த. செல்வம் ஒன்றிய பொருளாளர் எஸ். கணேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை தலைவர்கள் கிளைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 200 – க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனத்தின் மூலம் பேரணியாக அணிவகுத்து ஊரணிபுரம் மாவட்ட அலுவலகம், திருவோணம் , சிவவிடுதி , காடுவெட்டி விடுதி, மேலஊரணிபுரம், காரியாவிடுதி, நெல்லியடிகொல்லை, பட்டுவிடுதி, ஊரணிபுரம் கடைவீதி, கீழ ஊரணிபுரம், வெட்டுவாக்கோட்டை , திப்பன்விடுதி, தோப்பநாயகம், சென்னியவிடுதி, நரிபத்தை, நெய்வேலி வேளார்தெரு , செட்டிக்கொல்லை, இடையாத்தி மேற்கு, நெய்வேலி கடத்தெரு, மழவாமடிகொல்லை, இடையாத்தி கிழக்கு, காயாவூர்,பேராவூரணி களத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெடிகள்,பட்டாசுகள் மற்றும் ஒலி பெருக்கிகள் முழங்க சங்கத்தின் கொடியினை ஏற்றி உலக விவசாயிகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டினர் .