த
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமியார் கொட்டாய் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிலான சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்து வந்தது.
மேலும் இந்த சாலையில் பொதுமக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது இதன் காரணமாக இந்த பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.
மேலும் இந்த இடம் ரயில்வே சொந்தமான இடம் என்பதால் அவர்களிடம் அனுமதி பெற்று பின்னரே சாலை அமைக்கப்படும் சூழ்நிலையில் இருந்தனர்
இந்த நிலையில் பல ஆண்டுகளாக போராடிய நிலையில் இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் சீரிய முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் சுமார் 40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்தனர்
அதேபோல் சிவசக்தி நகர் பகுதியில் ரூபாய் 16 லட்சம் மதிப்பில் மின்துறை அலுவலகம் அமைக்க பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ்,. துணைச் சேர்மன் சபியுல்லா.திமுக பொதுக்குழு உறுப்பினர் அரசு, மாவட்டவிளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன்
திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர்கள் ஜீவிதா பார்த்திபன், வெள்ள ராஜா. ராஜேந்திரன், பிரேம், லட்சுமி வாசுதேவன், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
