திருப்பத்தூர் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா கடத்திய நபர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நடுப்பட்டு பகுதியை சேர்ந்த பங்காரு மகன் குமரவேல் வயது (38)

இவர் பொம்மிக்குப்பம் பகுதியில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு 8 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று குமரவேலுவின் மாமனார் வீடான மாது என்பவர் வீட்டை சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக தனிப்படை போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் குமரவேலுவை கைது செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது காரணமாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலுவை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…