திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து தனிமையில் வசிக்கும் மூதாட்டியை குறிவைத்து நகை பறிக்கும் மர்ம நபர்களால் பரபரப்பு‌!.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கனகா என்பவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

காயம்பட்ட மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை காவலரின் தங்க தாலி சரடு பரித்த சம்பவம் அரங்கேறியது.

மேலும் ஜோலார்பேட்டை போலீசார் அப்பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.