பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக் கோரியும் திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியருக்கு பணி பாதுகாப்புச் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் நடராஜன தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா, இராமலிங்கம், காசிராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ரவி கண்டன உரை நிகழ்த்தினார் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
தஞ்சாவூர். நவ.24.தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக கரிகால்சோழன் அரங்கத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்து தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை […]
தேவிரஅள்ளி அரசு பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவிரஅள்ளி கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வட்டார மருத்துவ […]
உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]