விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 29 10 2024 அன்று இரவு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் நெஞ்சு வலியால் அவதிபட்டார்

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
பின்பு 31 10 2024 அன்று அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று மருத்துவர்களால் தகவல் தெரிவிக்கப்படுகிறது
இந்தப் பெரியவருக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை என்பதால் அவருடைய உடலை வாங்கிச் செல்ல யாரும் முன் வரவில்லை
இதனால்ராஜபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இவருடைய பிணம் வைக்கப்பட்டுள்ளது
அப்படி வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியில் மின்சார அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் இவருடைய உடல் எலும்பு கூடாக தெரிகிறது

எனவே ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இப்படிப்பட்ட அட்டூழியம் நடக்கும் மருத்துவர்கள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சர் மா சுப்பிரமணியம் துரை ரீதியாக நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
