**வன்னிப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்க. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை , உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 3 லட்சம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.
மேலவன்னிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ,ஒரத்தநாடு வட்டம், வன்னிப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று 3-12-24 காலை 11 மணிக்கு நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை மற்றும் ஆர்வத்துடன் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குஅம்மாளு சுப்பையன் தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சு. தினகரன் தலைமை தாங்கினார். இண்டோகூல் நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் தொண்டு நிறுவன தலைவர் சு. ராமச்சந்திரன் கல்வி உதவி தொகை மற்றும் சீருடை வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் கி.கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ம.துரைராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி மகாலிங்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர் வேதவள்ளி வீரமணி மற்றும் சா.ராமகிருஷ்ணன், மா.ராமசாமி ஆசிரியர் மு.கோவிந்தராஜ், இரா.ராஜேந்திரன், தலைமையாசிரியை வசந்தி, ஆசிரியை ராகினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மாளு சுப்பையன் தொண்டு நிறுவனம் மற்றும் இண்டோகூல் காம்போசைட்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பாக கீழ வன்னிப்பட்டு மற்றும் மேல வன்னிப்பட்டு தொடக்கப் பள்ளி அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் அமர்வதற்கான உயர்தர இருக்கைகளும் வழங்கப்பட்டது. உயர்கல்வி பயிலும் ஏழை மாணவிகளுக்கு பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ30,000 வீதம் 10 மாணவிகளுக்கு ரூ 3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஏஐடியுசி தொழிற்சங்க தலைவரும் வழக்கறிஞருமான சி.சந்திரகுமார் வாழ்த்துரை வழங்கும்போது மேற்கண்ட தொண்டு நிறுவனம் மற்றும் இண்டர்கூல் கம்போசைட் நிறுவன நிர்வாக இயக்குநர் சு.ராமச்சந்திரன் சாதரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தினக்கூலியாக சென்னையில் வேலைபார்த்து கடுமையான உழைப்பின் மூலம் தற்போது பல்வேறுநாள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு பலகோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாக திகழ்கிறது.தான் பிறந்த பகுதிக்கு தனது நிறுவனத்தின் வருவாயிலிருந்து பல லட்சம் மதிப்பிலான உதவிகளை கல்விக்கும் அடிப்படை தேவைகளுக்கும் உதவி வருகிறார். குறிப்பாக தரிசாக இருந்த வன்னிப்பட்டு ஏரி ரூ40 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு தற்போது பெய்த மழையில் ஏரி நீர் நிரம்பி வழிகிறது..ரூ 30 லட்சம் செலவில் தரைத்தளம் சுற்றுச்சுவர் உள்ளிட்டு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியூருக்கு படிக்க செல்வதற்கு மாற்றாக வேன் வாங்கி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.பள்ளிக்கு மூன்று ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு அதற்கான சம்பளம் வழங்கப்படுகிறது. இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்,யோகா பயிற்சி, சிலம்ப பயிற்சி விளையாட்டுத்திடல் என பல லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஒக்கநாடு கீழையூர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 7 லட்சத்திற்கு மேற்பட்ட பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கிராம பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 200 நாற்காலிகள் சாமியானா, மின்சார சவப்பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இறப்புகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரனின் தன்னலமற்ற சேவையை பற்றி குறிப்பிட்டார்.
செய்தி.ஏ.கே.சுந்தர்

