வால்பாறையில் தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை தடுக்க சென்ற காவல் துறையினரிடம் அத்துமீறிய மூவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாவந்த சுற்றுலா பயணிகள் ஒரு தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை தடுக்க சென்ற போது காவல்துறையினரை அரசு பணிசெய்ய விடாமல் தடுத்துவாக்குவாதத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜித்து வயது 30,சரத் வயது 33,ஷாஜீவ் வயது 52 ஆகியோர் மீது காவலர் சிபி சக்கரவர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது