2299 கிராம உதவியாளர் (சிறப்பு காலமுறை ஊதியத்தில் – VAO அலுவலக கிராம உதவியாளர் பணி வாய்ப்பு) காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாடு அரசு காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை

வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம் : தமிழ்நாடு முழுவதும் வருவாய் & உட்கடை கிராம வேலை

பணியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்கள் :

அரியலூர் – 21,
சென்னை – 20,
செங்கல்பட்டு – 41,
கோயம்புத்தூர் – 61,
கடலூர் – 66,
திண்டுக்கல் – 29,
தருமபுரி – 39,
ஈரோடு – 141,
காஞ்சிபுரம் – 109,
கரூர் – 27,
கிருஷ்ணகிரி – 33,
மதுரை – 155,
மயிலாடுதுறை – 13,
நாகப்பட்டினம் – 68,
நாமக்கல் – 68,
பெரம்பலூர் – 21,
புதுக்கோட்டை – 27,
ராமநாதபுரம் – 29,
ராணிபேட்டை 43,
சேலம் – 105,
சிவகங்கை – 46,
தஞ்சாவூர் – 305,
தேனி – 25,
திருவண்ணாமலை – 103,
திருநெல்வேலி – 45,
திருப்பூர் – 102,
திருவாரூர் – 139,
திருவள்ளூர் – 151,
திருச்சி – 104,
தூத்துக்குடி – 77,
தென்காசி – 18,
திருப்பத்தூர் – 32,
விருதுநகர் – 38,
வேலூர் – 30,
விழுப்புரம் – 31.

மொத்த காலியிடங்கள் – 2299

மாத சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

வயது : 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை : திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மேலும் விவரங்களை www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.