அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி காமராசர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார பொதுமக்கள், மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அத்தோடு பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கண்ணிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி மருத்துவமனையில் இருந்து வந்திருந்த மருத்துவர்கள் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். நிகழ்ச்சிக்கு முதன்மை செயல் அதிகாரி ஆர். ஜெயகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் திரு. ரவிக்குமார் ஆர். முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மு. திருப்பதி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.